‘அக்கரன்’ திரைப்பட விமர்சனம் 3.5/5

176

Cast

M.S. Baaskar – veerapandi
Kabali Vishwanth – siva
Namo Naarayana – paranthaman
Venba – devi
Ahkash Premkumar – arjun
Priya Dharshini – priya
Karthik Chadrasekar – selvam

Crew

Producer – KKD
Production Company – Kundram Productions
Director – Arun K Prasad
DOP – M.A.Anand
Music – SR Hari
Editor – P.Manigandan
Stunt – Saravedi Saravanan
Production Executive – Sokkalingam
PRO – Sathish (AIM)
Publicity Designs – F5 Media

Tamilnadu Theatrical Release by Tamizh Cinemas (Dhanapal Ganesh & Shivani Senthil)

குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த எம்.எஸ்.பாஸ்கர்,படத்தின் ஆரம்பக்காட்சியிலேயே இருவரை கடத்தி சென்று அடைத்து வைக்கும் எம்.எஸ்.பாஸ்கர், அவர்களிடம் சில கேள்விகளை கேட்கிறார்.அதற்கு இருவரும் வெவ்வேறு மாதிரியாக பதில் சொல்கிறார்கள். அவர்களுடைய பதில்களில் உண்மை இல்லாததால் அவர்களுக்கு கொடூரமான தண்டனை வழங்க எம்.எஸ்.பாஸ்கர் தயாராக, ஒரு கட்டத்தில் இருவரும் உண்மையை சொல்கிறார்கள். அதன் மூலம் பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் திரையில் விரிகிறது. அது என்ன?, அதற்கும் எம்.எஸ்.பாஸ்கருக்கும் என்ன தொடர்பு?, அவர் கடத்தி வைத்திருக்கும் இரண்டு நபர்கள் யார்? போன்ற கேள்விகளுக்கான விடை தான் படத்தின் மீதிக்கதை.

எம்.எஸ்.பாஸ்கரின் மூத்த மகளாக நடித்திருக்கும் வெண்பா, மிக இயல்பாக நடித்திருப்பதோடு, சிறு சிறு எக்ஸ்பிரஷன்களை கூட ரசிக்கும்படி செய்து அசத்துகிறார். இளைய மகளாக நடித்திருக்கும் பிரியாவின் நடிப்பு அளவு.

ஒளிப்பதிவாளர் எம்.ஏ.ஆனந்த் மற்றும் இசையமைப்பாளர் எஸ.ஆர்.ஹரி இருவரும் ஆக்‌ஷன் திரில்லர் ஜானருக்கு ஏற்ற வகையில் பணியாற்றியிருக்கிறார்கள்.

எதிர்ப்பவர்களை எல்லாம் அசால்டாக போட்டு தள்ளும் வில்லனின் நடவடிக்கை சற்று லாஜிக் மீறலாக இருந்தாலும், ஆக்‌ஷன் திரில்லர் ஜானர் கதையை வித்தியாசமான கோணத்தில் சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் அருண் கே.பிரசாத், அரசியல், நீட் பயிற்சி மையங்களில் நடக்கும் மோசடி போன்ற விசயங்கள் மூலம் திரைக்கதையில் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்திருப்பதோடு இறுதியில் ஒரு திருப்பத்தை வைத்து அசத்தியிருக்கிறார்.

மொத்தத்தில், இந்த ‘அக்கரன்’-னின் கடும்கோபம் அநீதிகளை சுட்டெரிக்கும்.