ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் பிரமாண்ட துவக்கம்: தமிழக சினிமாவில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அறிமுகமாகிறார்!

புதிய தயாரிப்பு நிறுவனம் ட்ரீம் நைட் ஸ்டோரீஸ், DKS தனது முதல் படைப்பான “புரொடக்ஷன் நம்பர் 1” மூலம் திரைப்பட உலகில் தனது கால்பதிதுள்ளது . மான் கராத்தே ரெமோ, கெத்து போன்ற படங்க படங்களில் இணை இயக்குனராகவும் விரைவில் வெளியாகவிருக்கும் ரெட்டத்தல திரைப்படத்தில் டயலாக் ரைட்டராகவும் பணியாற்றிய, லோகன் இயக்கும் இந்த படத்துக்கான அறிமுக நிகழ்வு, திரையுலக பிரபலங்களும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பிரமுகர்களும் திரண்ட மகிழ்வான ஒரு இரவாக மாறியது.

புரொடக்ஷன் நம்பர் 1 படத்தின் தொழில்நுட்பக் குழுவில் உள்ள முக்கியமான தொழில்நுட்ப கலைஞர்கள்:
சந்தோஷ் நாராயணன் – இசையமைப்பாளர்
சந்தீப் கே. விஜய் – ஒளிப்பதிவாளர்
முத்துராஜ் – கலை வடிவமைப்பாளர்
ரசூல் பூக்குட்டி – ஒலி வடிவமைப்பாளர் (ஆஸ்கார் விருது பெற்றவர்)
சுப்ரீம் சுந்தர் – ஃபைட் மாஸ்டர்எடிட்டர் மோகன், இயக்குநர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் பி. எல். தேனப்பன், நடிகர் சதீஷ், இயக்குநர் விஜய் மில்டன், இயக்குநர் திருக்குமரன், இயக்குநர் பக்யராஜ் கண்ணன்
