“சலார்” திரைப்பட விமர்சனம்!

99

சென்னை:

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிரித்விராஜ் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் “சலார்”  இபடத்தில் பிரபாஸ்,  பிருத்வி ராஜ், ஸ்ருதிஹாசன், ஈஸ்வரிராவ், பாபி சிம்ஹா, ஜெகபதி பாபு, டினு ஆனந்த், ஸ்ரேயா ரெட்டி, ரமணா ராமச்சந்திரா ராஜு, தேவராஜ், மைம் கோபி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

தயாரிப்பு: ஹோம் பாலா.பிலிம்ஸ். இசை: ரவி பசுருர். ஒளிப்பதிவு; பவன் கவுடா.தயாரிப்பாளர்: விஜய் கிரகந்தூர்.

மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “சலார்” படத்தின் கதையைப் பொறுத்த்வரையில்,

ஒரு தனி நாடாக இயங்கிக் கொண்டிருக்கும். கான்சாராவில்  பிரபாஸ்,  பிருத்விராஜ் இருவரும்  சிறுவயதிலிருந்தே அவர்களுக்கு: ஏற்படும் ஒரு உன்னதமான நட்பு,  ஒரு   நாட்டை பிடிக்கும் அளவிற்கு ஒருங்கிணைந்த நட்பாக உருவெடுக்கிறது.  சிறுவயதாக இருக்கும் போது, பிரபாஸ்ஸின் அம்மாவுடைய உயிரை, தன் தந்தை ஜெகபதி பாபுவின் கட்டளையையும் மீறிக் காப்பாற்றுகிறான் பிருத்விராஜ். இதனால் வேதனையடைந்த தன் நண்பன் பிரபாஸ்ஸின் தாய் மகன் பிரபாஸ்ஸிடம் ‘நாம் இங்கிருந்து சென்று விடலாம். இனி இந்த நாட்டிற்கு திரும்பி வரக் கூடாது” என தாய் சத்தியம் செய்யக் சொன்ன போது, ‘மனம் குழம்பிப் போன பிரபாஸ்  தன்நண்பன்  பிருத்விராஜிடம், ‘நீ கூப்பிட்டால்தான் இனி நான் இங்கு வருவேன்” என சத்தியம் செய்துவிட்டு கான்சார் நாட்டை விட்டு தாயும், மகனும் வெளியேறி பல ஆண்டுகளாக அசாமில் நிலக்கரிச் சுரங்கங்கள் சூழப்பட்ட கிராமமான டின்சுகியாவில் வசிக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில்  2017 ஆம் ஆண்டில், ஸ்ருதி ஹாசன் தனது தந்தை கிருஷ்ணகாந்துக்குத் தெரியாமல் நியூயார்க்கில் இருந்து இந்தியாவுக்கு வரும் போது கதை களமே மாறி முன்னேறுகிறது. தனது அம்மாவின் அஸ்தியை கரைப்பதற்காக வெளிநாட்டில் இருந்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். அவரை கடத்திச் செல்ல ஒரு கும்பல் துரத்துகிறது. வெளி நாட்டில் இருந்து இந்தியாவில் இருக்கும் மைம் கோபியின் உதவியை நாடுகிறார் ஸ்ருதி ஹாசனின் தந்தை. இந் நிலையில் ஸ்ருதி ஹாசனை பிரபாஸிடம் சென்று பத்திரமாக இருக்க வைக்கிறார் மைம் கோபி. ஏற்கனவே யாரையும் அடிக்க மாட்டேன் என்று  தன் தாயிடம் சத்தியம் செய்துள்ள பிரபாஸ். ஸ்ருதியை கடத்த வந்த கும்பலை ஒருமுறை  தாயின் அனுமதியுடன் அடித்து துவைக்கிறார்.

இதனிடையே, கான்சார் அரசர் ராஜ மன்னார் ஜெகபதி பாபு,, தனக்கு அடுத்து அரசராக வர தன் இரண்டாவது மனைவியின் மகன் பிருத்விராஜை  உருவாக்க நினைக்கிறார். அவரது இந்த முடிவு, கான்சார் அரசின் அமைச்சர்கள் மற்றும் ஆலோசகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்துகிறது. அதனால் ஆட்சியை கவிழ்க்கவும் முயற்சி செய்கிறார்கள். கான்சார் அரசர் ராஜ மன்னார் ஜெகபதி பாபுவையும், பிரித்விராஜையும் கொல்ல உலகம் முழுவதுமிருந்து பல்வேறு படைகளைத் திரட்டுகிறார்கள். பிரித்விராஜ் மட்டும் எந்தவித படையையும் தயார் செய்யாமல், தனது நண்பன் பிரபாஸை உதவிக்கு அழைக்கிறார். நண்பன் பிரித்விராஜின் அழைப்பை ஏற்று கான்சாருக்குத் திரும்புகிறார் பிரபாஸ்.. இந்த சூழலில் எதிரிகளின் சூழ்ச்சியை முறியடித்து அவர் தன் நண்பனை காப்பாற்றினாரா? பிரபாஸூக்கும் கான்சார் அரசிற்க்கும் உள்ள தொடர்பு என்ன? என்பதுதான் “சலார்’ படத்தின் மீதிக்கதை.

இத்திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடித்திருக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் அட்டகாசமாக நடித்து அமர்க்களம் படுத்திருக்கிறார்.  தனது உயிர் நண்பனுக்காக உருகும் காட்சிகளில் திரைப்படம் பார்க்கும் நம்மையும் கண் கலங்க வைத்துவிட்டார்.ஆரம்பக் காட்சிகளில் மிகவும் சாந்தமாகவும் இறுதிக் காட்சிகளில் நடக்கும் சண்டைக்காட்சிகளில் வெறித்தனமாகவும் நடித்து ரசிகர்களிடம் பாராட்டை பெறுகிறார் கதாநாயகன் பிரபாஸ்..

அடுத்து இப்படத்திற்கு பெரிய பலம்   பிரித்திவி ராஜ் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் தன் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து மிக அற்புதமாக  நடித்துள்ளார். அவரின் பல நாள் கனவு ஒரு ஆக்ஷன் ஹீரோவாக வர வேண்டும் என்ற எண்ணம் இந்த படம் மூலம் நிறைவேறியுள்ளது.

நாயகி ஆத்யாவாக வரும் ஸ்ருதிஹாசனுக்கு அதிக வேலை இல்லை என்பதால் அதிக முக்கியத்துவமும் இல்லை. நாயகன் தேவாவின் நண்பன் பிலாலாக வரும் மைம் கோபி, அம்மாவாக வரும் ஈஸ்வரி ராவ், அரசர் ராஜ மன்னாராக வரும் ஜெகபதி பாபு, அவரது மகள் ராதா ராம மன்னாராக வரும்  ஸ்ரேயா ரெட்டி, பாரவாவாக வரும் பாபி சிம்ஹா, ரங்காவாக வரும் ஜான் விஜய் மற்றும் தேவராஜ், ராமச்சந்திர ராஜு, ரமணா என படத்தில் அதிகமான நடிகர்கள், நடிகைகள் இருப்பதால், எதையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை.

இப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இந்த கதையை பல கதைகளுடன் இணைத்து செயல்படுவதால், தெளிவாக இல்லாமல் அதை புரிந்துகொள்ள ரசிகர்களிடம் தெம்பு இல்லாத்தால் படாதபாடு பட வேண்டியிருக்கிறது. சில காட்சிகளை தன்னுடைய திரைக்கதையில் மூலம் புல்லரிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் நீல்.  கதையை லாஜிக் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் தொழில் நுட்பத்தையும் ஆக்ஷனையும் மட்டுமே நம்பி மிரட்டியிருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் நீல்.

பின்னணி இசையில் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார் ரவி பஸ்ரூர். பாடல்கள் பெரிதாக ரசிக்கும்படி இல்லை.

பவுன் கவுடாவின் ஒளிப்பதிவு ஆக்‌ஷன் காட்சிகளையும்,  புதுமை ஏதுமில்லாத காட்சிகளையும் ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் படமாக்கியிருப்பதை பாராட்டலாம்,

மொத்தத்தில் ‘சலார் பார்ட் 1 : சீஸ் ஃபயர்’ – அனைத்துத் தரப்பு ரசிகர்களும் பார்க்கலாம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.