
படத்தின் ஆரம்பத்திலேயே நாயகி பிரியங்கா திம்மேஷை கொலை செய்ய ஒருவர் விரட்டுகிறார். வீட்டிலிருந்து தப்பித்து வெளியே ஓடிச் செல்லும் பிரியங்காவை கார் ஒன்று அடித்து விடுகிறது. இதனால் தூக்கி வீசப்படும் பிரியங்கா, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
பழைய நினைவுகள் அனைத்தையும் இழந்து விடுகிறார் பிரியங்கா. அதன்பிறகு, நான்தான் உன் கணவன் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார் ஸ்ரீகாந்த்.
வீட்டில் சில காலம் ஓய்வெடுக்கிறார் பிரியங்கா அப்பொழுது ஸ்ரீகாந்த் சிலரை கொடூரமாக கொன்று வருகிறார். பிரியங்காவின் கண்முன்னே இருவரை கொல்கிறார்.
அடுத்து என்ன நடந்தது.?? ஸ்ரீகாந்த் யார்.??? என்பதே படத்தின் மீதிக் கதை.
ந
டிகர் ஸ்ரீகாந்த் நடித்து அசத்தியிருக்கிறார் , ரகு கதாபாத்திரத்திலும் அசத்தியிருக்கிறார்..
நாயகி பிரியங்கா தான் படத்தின் மையக்கருவாக வந்து நிற்கிறார். காதல், எமோஷன், செண்டிமெண்ட் என அனைத்து ஏரியாக்களிலும் அழகு தேவதையாக வந்து காட்சிகளை அழகூற கொடுத்திருக்கிறார்.
காட்சிகள் ஆங்காங்கே தொய்வடைவதும், லாஜிக் ஓட்டைகள் ஆங்காங்கே எட்டிப் பார்த்தது மட்டுமே படத்திற்கு சற்று பலவீனம்.
கதை, திரைக்கதை, பின்னணி இசை, பாடல் என படத்தில் பல பாசிடிவ் விஷயங்களை கொட்டி வைத்திருக்கிறார் இயக்குனர். யுவராஜ்ஜின் ஒளிப்பதிவு வெளிச்சம் காட்டியிருக்கிறது.
பல ட்விஸ்ட் காட்சிகள் படத்தில் இருப்பதால், கதையின் சுவாரஸ்யத்தைக் கருதி சில பல காட்சிகளை விவரிக்க முடியவில்லை.
விடுமுறையை கொண்டாட சரியான படைப்பாக வந்திருக்கும் “சத்தமின்றி முத்தம் தா” படத்தை நிச்சயமாக ஒருமுறை பார்க்கலாம்.
நடிகர், நடிகை :
ஸ்ரீகாந்த் – விக்னேஷ்
பிரியங்கா திம்மேஷ் – சந்தியா ஹரிஷ் பேராடி – இன்ஸ்பெக்டர் எட்வர்ட்
வியான் – ரகு
நிஹாரிகா – ஷீலா
தொழிலநுட்ப கலைஞர்கள் :
இசை : ஜுபின்
( திரௌபதி, ருத்ரதாண்டவம் )
பாடல்கள் : விவேகா
ஒளிப்பதிவு : யுவராஜ்.M
நடனம் : தினேஷ்
ஸ்டண்ட் : மிராக்கிள் மைக்கேல்
மக்கள் தொடர்பு : மணவை புவன்
தயாரிப்பு மேற்பர்வை : AJ.P. ஆனந்த்
தயாரிப்பு நிறுவனம் : செலிபிரைட் புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர் : கார்த்திகேயன்.S
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு மேற்பார்வை – ஆனந்த்
தயாரிப்பு – கார்த்திகேயன்.S
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் – ராஜ் தேவ்.
இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் உலகத் திரைப்பட விழாவில் பத்து விருதுகளுக்கு மேல் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு ஆனந்த விகடன் மற்றும் சாவி இதழ்களில் சிறுகதைகள் எழுதியுள்ளார். மேலும் அவர் அமெரிக்காவில் நடைபெற்ற திரைக்கதை போட்டியில் அனைத்து நாடுகளும் கலந்து கொண்ட நிலையில் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு கதைகளான ‘KISS DEATH மற்றும் A STRANGER IS WALKING BY’ஆகியவற்றிற்கு சொந்தக்காரர் ஆவார்.
பாடல்கள் :
1. செம்பரம்பாக்கம் ஏரி அளவு ( பாடியது – ஆண்ட்ரியா )
2.ஆசை மழை – (பாடியவர்கள் M.M.மானசி – ஜித்தின் ராஜ்)
3.கடந்து நீயும் போகும் போது – (பாடியவர் ரவி.G )