பயமறியா பிரம்மை படம் விமர்சனம்…

105

பயமறியா பிரம்மை படம் விமர்சனம்…

சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் கொலை குற்றவாளி ஜெகதீஷ் அவரின் வாழ்க்கையை புத்தமாக எழுதுவதற்காக எழுத்தாளர் கபிலன் அவரை சிறையில் சந்திக்கிறார்.

பேசிகொண்டிருக்கும் போது “புத்தகங்கள் மனிதர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று கபிலன் சொல்கிறார்.

அது எப்படி ஜெகதீஷ் கேட்கிறார், இந்த கேள்விக்கு பதிலாக அவரது வாழ்க்கையையே புத்தக வாசகர்களின் கண்ணோட்டத்தில் திரையில்  விவரிப்பது தான் இந்த படம்

இந்த ஆறு பேரும் படத்தின் முதன்மை கதாபாத்திரம் ஜெகதீஷ் என்றாலும், ஜே.டி, குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன், சாய் பிரியங்கா ரூத், ஹரிஷ் ராஜு, ஜாக் ராபின் ஆகியோரு கதாபாத்திரமாக நடித்திருக்கிறார்கள்.ஜெகதீஷ் என்ற கதபாத்திரத்தின் வாழ்க்கையில் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடந்த சம்பவங்களை திரையில் மிக நேர்த்தியாக வெளிக்காட்டியிருக்கிறார்கள்.

ஜான் விஜய் , வினோத் சாகர், திவ்யா , படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் தங்களது வேலையை சிறப்பாக செய்திருக்கிறார் , இயக்குநர் சொன்னதை கேட்டு அப்படியே நடித்திருக்கிறார்கள்..

பிரவின் மற்றும் நந்தா ஆகியோரது ஒளிப்பதிவும், கே -வின் இசையும் படத்தை ஓரளவு காப்பாற்றியிருக்கிறது…

ராகுல் கபாலி, வித்தியாசமான முறையில் கதையை புரியும் படி சொல்லி ரசிகர்களை கவர்கிறார்…

மொத்தத்தில், இந்த ‘பயமறியா பிரம்மை’ ஒரு முறை பார்க்கலாம்