மெய்யழகன் திரை விமர்சனம்! ரேட்டிங் 4/5

85

96 படம் மூலம் மொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்த, இயக்குநர் பிரேம்…

சொந்தங்களின் துரோகத்தால் இரவோடு இரவாக தஞ்சாவூரை விட்டுச் சென்று,  சென்னையில் குடியேறும் அரவிந்த்சாமி குடும்பம் 20 வருடங்களாக சொந்த ஊர் மற்றும் சொந்தங்களின் எந்தவித தொடர்பும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள்.

சித்தப்பா மகளின் திருமணத்திற்கு போக வேண்டிய சூழல் ஏற்பட்டது, குடும்பத்தின் சார்பாக அரவிந்த்சாமி தஞ்சாவூர் செல்ல… மனது நிறைய தங்கை மீது பாசம் இருந்தாலும், உறவினர்களின் துரோகத்தால் வேண்டா வெறுப்பாக திருமணத்திற்கு செல்லும் அரவிந்த்சாமிக்கு, உறவினர் கார்த்தி அறிமுகமாகி, அவரிடம் அன்பு பொழிகிறார். கார்த்தி எந்தவிதத்தில் உறவு, அவர் பெயர் என்ன? என்பது கூட தெரியாமல், தெரிந்தது போல் அவருடன் பழகும் அரவிந்த்சாமி, கார்த்தியின் மூலமாக தன்னைப் பற்றியும், உறவுகளின் உண்ணதத்தை பற்றியும் தெரிந்துக்கொள்ள நேரிடும் பயணம் தான் இப்படம்…

பல நேரம் சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு போயி, நம்ம மேல பாசத்த கொட்டி பழைய நினைவுகள பேசுறவங்க, பேர் தெரியாம முழிப்போம். இந்த சின்ன இழை தான் இந்தப்படம். ஆனா அதை அப்படியே மனச உருக வைக்கிற படமா எடுத்துருக்காரு பிரேம்..

ஒரு முழு இரவில் இருவரும் உரையாடிக்கொண்டே இருக்கிறார்கள் ஆனால் அத்தனை நாஸ்டாலஜியா கதைகள்.

அரவிந்த் சாமி படத்தில் ஹீரோ கார்த்தி சப்போர்டிங் ரோல் பண்ணிருக்காரு.. இப்படி ஒரு கதையை செய்ய முன்னணி ஹீரோவிற்கு தைரியம் வேண்டும் …

படம் முழுக்க தஞ்சாவூரை இரவில் சுற்றிப்பார்த்த உணர்வைத் தருகிறது கேமரா. இசை நம் பால்ய நினைவுகளைத் தூண்டுகிறது. கமல்ஹாசனின் குரலில் விரியும் அந்தப்பாடல் அற்புதம்…

எந்த பரபரப்பும் இல்ல, டிவிஸ்ட் இல்ல , ஒரு இரவு அது முழுக்க பேச்சு, பேச்சு, பேச்சு… அது மூலம் நம் வாழ்வின் அழகான தருணங்களை நமக்கே எடுத்துக்காட்டுகிறது. படம் முடிந்து வரும்போது ஒரு ஆத்மார்த்தமான படம் பார்த்த உணர்வு மெய்யழகன்….

மொத்தத்தில், ‘மெய்யழகன்’ மனதுக்கு நெருக்கமானவன்.

ரேட்டிங் 4/5