
அறிமுக இயக்குனர் பிரசாத் முருகன் இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் Once Upon a Time in Madras பரத், ஷான், அபிராமி, தலைவாசல் விஜய், பி ஜி எஸ், ராஜாஜி, அஞ்சலி நாயர், பவித்ரா லக்ஷமி, சையத், கல்கி,இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இருக்கிறது.
ஃப்ரைடே ஃபிலிம் பேக்டரி நிறுவனம் சார்பாக கேப்டன் டிவி ஆனந்த் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
படத்துவக்கத்திலேயே , சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு உண்மை சம்பவம்… இராணுவ வீரர்கள் வசிக்கும் இடத்திற்குள் சிறுவன் ஒருவன் பழம் பறித்ததாக கூறி அச்சிறுவன் சுடப்பட்டு இறந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது.
சுடப்பட்ட தூக்கி வீசி விடுகிறார் அந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர். எறியப்பட்ட கைத்துப்பாக்கியானது நால்வரின் கைகளுக்கு சிக்குகிறது. துப்பாக்கி கைக்கு வந்ததும் அவர்களின் வாழ்க்கை என்னவானது என்பதே படத்தின் முழு கதை..
நான்கு நண்பர்களிடையே துப்பாக்கி கிடைக்கிறது. அதன்பிறகு அவர்களுக்கு என்ன நடக்கிறது பார்க்கலாம்..
முதலாவதாக, தலைவாசல் விஜய்யின் மகளாக வருகிறார் பவித்ரா.
இரண்டாவதாக, துப்புரவு தொழில் செய்யும் வேலை பார்த்து வருகிறார் அபிராமி. இவரது மகன் கார்த்தி.
மூன்றாவதாக, கூலிப்படையாக இருந்த பரத், தனது காதல் மனைவியை திருமணம் செய்த பிறகு மனம் திருந்தி வாழ்ந்து வருகிறார்.
நான்காவது, அப்பா கூறிய வார்த்தைக்காக ஒரு பெரிய இடத்திற்கு மருமகளாக செல்கிறார் அஞ்சலி.
இந்த நான்கு கதைகளுக்குள்ளும் துப்பாக்கி நுழைகிறது. அந்த துப்பாக்கி அவர்களது வாழ்க்கையை எப்படி மாற்றியது என்பதே இப்படத்தின் முக்கிய பங்கு..
மிகவும் யதார்த்தமான நடிகர், நடிகைகளை படத்தில் இணைத்தது படத்திற்கு பெரும் பலமாக பார்க்கலாம்.. எப்போதும் தனது படத்தின் கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர் நடிகர் பரத். அப்படியாக, இப்படத்திலும் தனது கேரக்டரின் வலுவை புரிந்து அக்கதாபாத்திரமாகவே மாறி அதற்கு உயிர் கொடுத்திருக்கிறார் பரத்.
அழகிலும் நடிப்பிலும் மிளிர்கிறார் அஞ்சலி. இவரது மாமியாராக நடித்தவர், மாமனாராக நடித்தவர் இருவரும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்கள்.
இப்படியொரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்காக நடிகை அபிராமியை வெகுவாகவே பாராட்டலாம். தனது திருநங்கை மகளுக்கு ஏற்பட்ட அநீதியை நினைத்து அழும் இடத்தில் கண்கலங்க வைத்துவிடுகிறார் அபிராமி.
தான் ஒரு சீனியர் என்பதை தனது நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார் தலைவாசல் விஜய்.
காதலும் ஜாதியும் குறித்த பார்வையை சமூகத்தின் பார்வையாக பேசும் காட்சிகளில் கைதட்டல் பெறுகிறார் நடிகர் ஷான்.
ஏனைய நடிகர், நடிகைகளும் நடிப்பில் ஜொலித்திருக்கிறார்கள். சமூகத்தில் தொடர்ச்சியாக நடக்கும் ஒரு சில சம்பவங்களை மிகவும் தைரியமாக எடுத்து கூறியிருக்கிறார் இயக்குனர். திரைக்கதையின் ஓட்டத்தில் இன்னும் சற்று மெனக்கெட்டிருக்கலாம் என்று தோன்றியது.
பின்னணி இசைமற்றும் பாடல்கள் இரண்டிலுமே தனது முழு உழைப்பைக் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர். ரசிக்கும்படியாகவும் இருந்தது.
கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
இப்படியான படங்களில் வசனங்கள் பெரிதும் கவனிக்கும்படியாக இருக்க வேண்டும். அப்படியாக, ஜெகன் கவிராஜின் வசனம் கைதட்டல் கொடுக்கப்படியாக எழுதியிருக்கிறார்.
Once Upon a Time in Madras – சமூகத்தில் பொறுப்புள்ள படம்.