’ட்ராமா’ (TRAUMA) திரைப்பட விமர்சனம் 3.5/5

98

விவேக் பிரசன்னா, சாந்தினி, சஞ்சீவ், ஆனந்த், பூர்ணிமா ரவி, ப்ரதோஷ், மாரிமுத்து, ரமா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் தர்மதுரை மாரியப்பன் இயக்கத்தில் இன்று திரைக்கு வந்திருக்கும் டிராமா திரைப்படத்தின் விமர்சனம்…..

ஆட்டோ ஓட்டுநரின் மகளான பூர்ணிமா ரவி, காதலனால் கர்ப்பமடைந்து ஏமாற்றப்படுவதோடு, காதலனின் உண்மையான பின்னணி பற்றி தெரிந்து கொண்டு அவருடன் வாழவே கூடாது, என்ற முடிவுக்கு வருகிறார்.

இந்த இரண்டு கதைகளிலும் பாதிப்புக்கு உள்ளான பெண்கள் அதில் இருந்து மீண்டார்களா?, இவர்களின் பாதிப்புக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்ற கதையை மூன்று விதமான கதைகளாக பிரித்து சொல்லி, அவைகளை மர்ம முடிச்சுகளால் இணைப்பது தான் ‘ட்ராமா’.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா, வழக்கம் போல் எதார்த்தமான நடிப்பு மூலம் பல உணர்வுகளை கொட்டி தீர்த்திருக்கிறார். மனைவியின் குழந்தையின்மை பிரச்சனைக்கு தன்னிடம் உள்ள குறைபாடு தான் காரணம் என்பது தெரிந்தாலும், அதை மனைவியிடம் இருந்து மறைப்பது, அதனால் மனைவிக்கு ஏற்படும் பெரும் பாதிப்பு ஆகியவற்றை எண்ணி வருந்துவது என்று நடிப்பில் அசத்தியிருக்கிறார்

இந்நிலையில், தனியார் கருத்தரிப்பு மையம் ஒன்றின் விளம்பரத்தைக் கண்டு, அங்கு சிகிச்சை எடுக்கிறார் விவேக் பிரசன்னா.

நாட்கள் கடந்து செல்ல, சாந்தினி கர்ப்பமாகிறார்.இந்த கதை நடந்து கொண்டிருக்கும் வேலையில், மற்றொரு பக்கம் ஒரு கதை நகர்கிறது.

அதில், ஆட்டோ ஓட்டுநர் மாரிமுத்துவின் மகளாக வரும் பூர்ணிமா ரவியை காதலிக்கிறார் ப்ரதோஷ். முதலில், ப்ரதோஷின் காதலை ஏற்க மறுத்தாலும், அதன்பின் அவர் மீது காதலில் விழுகிறார் பூர்ணிமா.

இவர்கள் இருவரும் நெருங்கி காதலித்ததன் விளைவு, பூர்ணிமா கர்ப்பமாகிறார்.

இந்த இரண்டு கதைக்குள்ளும் இரண்டும் பெண்கள் கர்ப்பமாகியிருக்கிறார்கள். இவர்களுக்குள் என்ன தொடர்பு.?? சாந்தினியின் கர்ப்பத்திற்கு பின்னால் நடந்தது என்ன.?? பூர்ணிமா ரவியின் வாழ்க்கையில் நடந்தது என்ன.?? என்பதே படத்தின் மீதிக் கதை.

ஒரே கதையை மூன்று விதமான கதைகளாக பிரித்து சொல்லி, அவற்றை மர்ம முடிச்சுகள் மூலம் இணைத்திருக்கும் படத்தொகுப்பாளர் முகன் வேல் பணி கவனம் ஈர்க்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் தம்பிதுரை மாரியப்பன், மருத்துவ பின்னணியில் நடக்கும் குற்ற செயல்களை மையமாக வைத்து எழுதியிருக்கும் திரைக்கதை சுவாரஸ்யமாக இருப்பதோடு, அதை சொல்லிய விதம் விறுவிறுப்பாகவும், வேகமாகவும் இருக்கிறது.

மூன்று கதைகள் மூலம் தான் சொல்ல வந்த விசயத்தை வித்தியாசமாக சொல்லியிருக்கும் இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன், எதிர்பாராத திருப்பங்கள் மூலம் காட்சிக்கு காட்சி அதிர்ச்சியளித்து பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட வைத்துவிடுகிறார்.

மொத்தத்தில், ‘ட்ராமா’ பார்க்கலாம்.