ரெபெல் ஸ்டார் பிரபாஸ், இயக்குநர் ஹனு ராகவபுடி (Hanu Raghavapudi) இணையும் பான் இந்திய படத்திற்கு “ஃபௌசி” (Fauzi) ,எனத் தலைப்பிடப்பட்டுள்ளது !!

ரெபெல் ஸ்டார் பிரபாஸ், இயக்குநர் ஹனு ராகவபுடி (Hanu Raghavapudi) இணையும் பான் இந்திய படத்திற்கு “ஃபௌசி” (Fauzi) ,எனத் தலைப்பிடப்பட்டுள்ளது !!
பிரபாஸ் குளோசப் ஷாட்டில், கடும் உறுதியான பாவனையில் வீரத்தை வெளிப்படுத்துகிறார். அவரது கண்களில் தெரியும் தீவிரம், கூர்மையான மீசையுடன் கூடிய தோற்றம், தன்னுடைய கடமைக்காக உயிர் அர்ப்பணிக்கும் வீரனின் உருவத்தை எடுத்துக்காட்டுகிறது. “A Battalion Who Walks Alone” எனும் டேக்லைன், ஒரு தேசத்தின் போராட்டத்தை தனியாக சுமக்கும் வீரனின் தனிமையும், அதே சமயம் அவனது உறுதியையும் பிரதிபலிக்கிறது.
““ஃபௌசி” போஸ்டர் எதிர்பார்ப்பைத் தாண்டி, ஒரு மாபெரும் திரை அனுபவத்திற்கான ஆவலைத் தூண்டுகிறது. உணர்ச்சியும் பிரமாண்டமும் கலந்த ஹனு ராகவபுடியின் தனித்துவமான பாணியில், இந்த படம் பிரபாஸை இதுவரை இல்லாத ஒரு வித்தியாசமான தோற்றத்தில் காண்பிக்கவுள்ளது.
இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக இமன்வி ( Imanvi ) நடிக்கிறார். மேலும் மிதுன் சக்ரபோர்த்தி (Mithun Chakraborty) , அனுபம் கெர், ஜெயப்பிரதா, பானு சந்தர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.
அநில் விலாஸ் ஜாதவ் புரடக்சன் டிசைன் பணிகளை கவனிக்க, கோதகிரி வெங்கடேஸ்வரராவ் எடிட்டிங் பணிகளை செய்கிறார்.அதிரடி போஸ்டருடன், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “ஃபௌசி”, ஒரு சாதாரண பான்-இந்தியா படம் அல்ல, பிரபாஸின் சினிமாப் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கவுள்ள காவியம்!
ஃபௌசி திரைப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம், மற்றும் வங்காள மொழிகளில் வெளியாகவுள்ளது.
நடிப்பு: பிரபாஸ், இமன்வி, மிதுன் சக்ரபோர்த்தி, அனுபம் கெர், ஜெயப்பிரதா, பானு சந்தர் மற்றும் பலர்.
தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம் : ஹனு ராகவபுடி
தயாரிப்பு நிறுவனம் : மைத்ரி மூவி மேக்கர்ஸ்
தயாரிப்பாளர்கள் : நவீன் எர்நேனி, Y. ரவி சங்கர், பூஷன் குமார்
ஒளிப்பதிவு : சுதீப் சட்டர்ஜீ (ISC)
இசை : விஷால் சந்திரசேகர்
புரடக்சன் டிசைனர் : அனில் விலாஸ் ஜாதவ்
எடிட்டிங் : கோதகிரி வெங்கடேஸ்வரராவ்
பாடல் வரிகள் : கிருஷ்ணகாந்த்
நடன அமைப்பு : பிரேம் ரக்ஷித்
உடை வடிவமைப்பு : ஷீதல் இக்பால் சர்மா, T.விஜய் பாஸ்கர்
VFX : RC. கமலக்கண்ணன்
பப்ளிசிட்டி டிசைனர்கள் : அனில் – பானு
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ (First Show)