தென்னிந்தியாவின் முதல் பான் இந்தியா இசை ஆல்பம் ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla)!

59

தென்னிந்தியாவின் முதல் பான் இந்தியா இசை ஆல்பம் ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla)!

இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையில், விகாஷ் நாகராஜ் இயக்கத்தில் வெளியான பான் இந்தியா இசை ஆல்பம் ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla)!

 

தென்னிந்தியாவில் சுயாதீன பாடல்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களை கவரும் துள்ளல் மற்றும் காதல் பாடலாக உருவாகியுள்ளது ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla). தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகியுள்ள இந்த இசை ஆல்பம், தென்னிந்தியாவின் முதல் பான் இந்தியா இசை ஆல்பம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வரும் அச்சு ராஜாமணி இசையமைத்து, பாடியிருக்கும் இந்த பாடல் வரிகளை, த.வெ.க மற்றும் விஜய்க்கான அரசியல் பாடல்களை எழுதி வரும் கானா சல்லு எழுதியுள்ளார்.

‘மாலை பொழுதின் மயக்கத்திலே’. ‘கோலி சோடா 2’, ‘விழித்திரு’, ’கொலையுதிர் காலம்’, ‘மழை பிடிக்காத மனிதன்’ உள்ளிட்ட பல படங்களின் மூலம் தமிழில் பல ஹிட் மற்றும் டிரெண்டிங் பாடல்களை கொடுத்திருக்கும் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணியின் இசையமைப்பில் உருவாகியுள்ள ‘ஹார்ட்குல்ல’ இளைஞர்களின் இதயங்களை கவரும் விதத்தில் உருவாகியுள்ளது.

 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான  ”நிசாரிசா” பாடலை பிரபல பாடகி சந்திரலேகா அனுபமா மறு உருவாக்கம் செய்து உருவாக்கிய வீடியோ பாடலை இயக்கிய விஹாஸ் நாகராஜ் ‘ஹார்ட்குல்ல’ இசை ஆல்பத்தை இயக்கியிருக்கிறார். ஜான்ராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 

டீஜே அருணாச்சலம் மற்றும் விஷாகா திமன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த இசை ஆல்பத்தை பிரபாத் புரொடக்‌ஷன்ஸ் சார்பில், பிரபாத் கிராந்தி ரெட்டி தயாரித்திருக்கிறார்.

 

சரிகமா நிறுவனம் வெளியிடும் ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla) இசை ஆல்பம் மார்ச் 31 ஆம் தேதி வெளியானது.

 

Music : Achu Rajamani

Producer: Prabhat Kranthi Reddy

Production: Prabhat Productions

Starring: Teejayarunsalam , Vishakha dhiman

Director: Vihas Nagaraj

Dop : JOHNRAM

Lyricist: Gana sallu

Singer : Achu Rajamani