’பிளாஸ்ட்’ திரைப்பட விமர்சனம் 4/5

38

’பிளாஸ்ட்’ திரைப்பட விமர்சனம்

அர்ஜுன், சிறு வயது முதலே தனது மகளுக்கு கராத்தே பயிற்சி அளிப்பதோடு, எங்கு தப்பு நடந்தாலும், யாருக்கு நடந்தாலும் தட்டிகேட்க வேண்டும் என்று சொல்லி வளர்க்கிறார்.

கராத்தே பயிற்சி ஆசிரியரான அர்ஜுன்

எங்கு தப்பு நடந்தாலும் அதை அதிரடியாக தட்டி கேட்கிறார். இதனால் அவருக்கு சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட, அம்மா அபிராமியின் அறிவுரையின்படி அமைதியாக இருக்க பழகுகிறார்.

காட்டியிருக்கிறார்.

 

இயக்குநர் கற்பனை செய்த காட்சிகளுக்கு உயீர் கொடுத்தவர்களின் முக்கியமானவர் சண்டைப்பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபு. அர்ஹுனின் அறிமுக சண்டைக்காட்சி முதல், ஒட்டுமொத்த குடும்பமே இணைந்து மேற்கொள்ளும் ஆக்‌ஷன் வரை படத்தில் இடம்பெறும் அனைத்து ஆக்‌ஷன் காட்சிகளையும் மிரட்டலாக மட்டும் இன்றி வியக்க வைக்கும் விதத்தில் வடிவமைத்திருக்கிறார். குறிப்பாக ப்ரீத்தி முகுந்தன் மற்றும் அபிராமி ஆகியோரை பயன்படுத்திய விதம், அவர்களுக்கான சண்டைக்காட்சிகளை வடிவமைத்த விதம் பாராட்டுக்குரியது. இருவரும் நிஜமாகவே கராத்தே பயிற்சி பெற்றிருப்பார்களோ…!, என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அவர்களது சண்டைக்காட்சிகள் வியக்க வைக்கிறது.

படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ.ராகவ், வேகமான காட்சிகளை அதிவேகமாக நகர்த்தும்படி காட்சிகளை தொகுத்திருந்தாலும், அனைத்தையும் ரசிக்க வைக்கிறார். சண்டைக்காட்சிகள் தான் படத்தின் முக்கிய பலம் என்பதை உணர்ந்து பணியாற்றியிருப்பவர், தனது நுணுக்கமான படத்தொகுப்பின் மூலம் சண்டைக்காட்சிகளை ஒரு கதாபாத்திரமாகவே வலம் வர செய்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் சுபாஷ் கே.ராஜ், கமர்ஷியல் படம் என்றாலும் அதை பெண்களுக்கு நம்பிக்கையும், தைரியமும் கொடுக்கும் ஒரு படைப்பாக கொடுத்திருக்கிறார். அம்மா, அப்பா உட்பட யாரின் நிழலிலும் இருக்காமல் பெண்கள் தனித்து நிற்க வேண்டும், எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை தனித்து சமாளிக்க வேண்டும் என்ற அவரது அறிவுரைக்காகவே தனியாக பாராட்டலாம்.

குடும்ப திரைப்படத்திற்குள் ஒரு அதிரடி ஆக்‌ஷன் திரைப்படம் என்று சொல்லும் அளவுக்கு, அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளோடு முழு படத்தையும் ரசிக்க வைத்திருக்கும் இயக்குநர் சுபாஷ் கே.ராஜ், தொய்வில்லாத திரைக்கதை, விறுவிறுப்பான காட்சிகள் மூலம் இரண்டு மணி நேரம் எப்படி போனது, என்று தெரியாதவாறு பார்வையாளர்களின் கவனத்தை கட்டிப்போட்டு விடுகிறார்.

வியக்க வைக்கும் ஆக்‌ஷன் காட்சிகள், எதிர்பார்க்காத திருப்பங்கள் என முதல் பாதி படம் விறுவிறுப்பாக பயணித்தாலும், இரண்டாம் பாதி கொஞ்சம் லாஜிக் மீறலோடு பயணிப்பது படத்தின் சிறு குறையாக தெரிந்தாலும், அது படத்தை எந்தவிதத்திலும் பாதிக்காதவாறும், அதை மறந்தும் பார்வையாளர்கள் படத்தை கொண்டாட வைப்பது படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளும், அதை திரைக்கதையோடு இணத்து சொன்ன இயக்குநரின் புத்திசாலித்தனமும் தான்.

பிளாஸ்ட்’ மாபெரும் வெற்றி