(I Am Game) திரைப்பட விமர்சனம்

18

கடன் பிரச்சனையில் இருந்து மீள்வதற்காக கிரிக்கெட் சூதாட்டட்தில் ஈடுபடுகிறார், ஆனால் அதிலும் தோல்வியடைந்து மொத்த பணத்தையும் இழந்து விடுகிறார். இதற்கிடையே விபத்து ஒன்றில் சிக்கி படுகாயம் அடையும் துல்கர் சல்மானின் ஒரு கை சிதைந்து விடுகிறது. இதனால், இறந்த ஒருவரது கை அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படுகிறது. பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தன்னுடைய வழக்கமான பணிகளை மேற்கொள்ளும் துல்சர் சல்மானின் வாழ்க்கையில் அவரது புதிய கை பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

படம் முழுவதும் ஸ்டைலான உடையில், ஸ்டைலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் துல்கர் சல்மான், கை மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு சவாலான காட்சிகளை மிக சாமர்த்தியமாக கையாண்டு ரசிக்க வைக்கிறார். தன் உடலோடு பொருந்தியிருந்தாலும் தன் கட்டுப்பாட்டை மீறி செயல்படும் கையை வைத்துக் கொண்டு துல்கர் சல்மான் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தன் நடிப்பு மூலம் நேர்த்தியாக பார்வையாளர்களிடத்தில் கடத்தி விடுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் கயாடு லோஹர், மெழுகுச் சிலை போல் அழகாக இருக்கிறார். அமைதியான முகம், அளவான நடிப்பு என்று படம் முழுவதும் நாயகனுக்கு துணையாகவும், படத்திற்கு பலமாகவும் பயணித்திருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் மிஷ்கின், சூதாட்ட உலகத்தையும், அதன் செயல்பாடுகளையும் பார்வையாளர்கள் கண்முன் நிறுத்தும்படி நடித்திருக்கிறார். அவரது ஆக்ரோஷமான நடிப்பும், உடல்மொழியும் டேவிட் ஆப்ரஹாம் என்ற கதாபாத்திரத்திற்கு நூறு சதவீதம் நியாயம் சேர்த்திருக்கிறது.

ஆண்டனி வர்கீஸ், கதிர், சம்யுக்தா விஸ்வநாதன், வினய் ஃபோர்ட் ஆகியோருக்கு சிறிய வேடம் என்றாலும் திரைக்கதையில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஜிம்ஷி காலித், இரவு நேர காட்சிகளை பல்வேறு விளக்குகள் மூலம் பிரகாசமாக காட்சிப்படுத்தி, சூதாட்ட உலகத்தில் பார்வையாளர்களையும் பயணிக்க வைக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவு நேரத்தில் நடந்தாலும், வண்ணங்கள் மற்றும் விளக்குகள் மூலம் அந்த உணர்வே பார்வையாளர்களுக்கு ஏற்படாத வகையில் படம் முழுவதையும் வண்ணமயமாகவும், பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.