
ஜோஜு ஜார்ஜ் வழக்கம் போல் இயல்பாக நடித்து கலக்குகிறார். மனைவியின் நிலை கண்டு கலங்குவதும், அடுத்த கனமே அதற்கு காரணமானவர்கள் மீது இருக்கும் தனது கோபத்தை கண்களில் வெளிப்படுத்துவது என அதிகம் பேசாமலேயே தனது உணர்வுகளை நேர்த்தியாக வெளிப்படுத்தி நடித்து இருக்கிறார்..
அபிநயா ஜோஜு ஜார்ஜின் மனைவியாக நடித்திருக்கும் , அழகு , நடிப்பு இரண்டிலும் கவனத்தை ஈர்க்கிறார்.
வில்லன்களாக நடித்திருக்கும் இளைஞர்கள் சாகர் சூர்யா மற்றும் ஜுனாயஸ்.வி.பி இருவரும் மிரட்டுகிறார்கள்.
வேணு மற்றும் ஜிண்டோ ஜார்ஜ் ஆகியோரது ஒளிப்பதிவு காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருப்பதோடு, கதாபாத்திரங்களின் உணர்வுகளையும், தோற்றங்கள் மூலம் அவர்களின் குணங்களையும் மிக நேர்த்தியாக வெளிக்காட்டியிருக்கிறது.
விஷ்ணு விஜய் மற்றும் சாம்.சி.எஸ் ஆகியோரது இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. குறிப்பாக பின்னணி இசை திரைக்கதைக்கு கூடுதல் விறுவிறுப்பு கொடுத்திருக்கிறது.
மனு ஆண்டனியின் படத்தொகுப்பு மற்றும் அஜயன் அடாட்டின் ஒலி வடிவமைப்பு இரண்டுமே படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
சீமா, பிரசாந்த் அலெக்சாண்டர், சுஜித் சங்கர், பாபி குரியன், ரஞ்சித் வேலாயுதம், சாந்தினி ஸ்ரீதரன், அபாயா ஹிரண்மயி, சோனா மரியா ஆபிரகாம், லங்கா லக்ஷ்மி, பிரிட்டோ டேவிஸ், ஜெயசங்கர், அஷ்ரப் மல்லிசேரி, டாக்டர் மெர்லட் ஆன் தாமஸ் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
ஆக்ஷன் கமர்ஷியல் கதை தான் என்றாலும் அதை சுவாரஸ்யத்துடனும், எதிர்பார்ப்புடனும் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் ஜோஜு ஜார்ஜ். நாயகனாக இருந்தாலும், திரைக்கதையில் பல கதாபாத்திரங்களை பயணிக்க வைத்து அதன் மூலம் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்பவர், இரண்டு இளைஞர்கள் நாயகனிடம் சிக்குவார்களா? என்ற எதிர்பார்ப்புடன் பார்வையாளர்களை சீட் நுணியில் உட்கார வைக்கிறது.
‘நான் மகான் அல்ல’ படத்திலேயெ இத்தகைய இளைஞர்களின் வெறியாட்டத்தை நாம் பார்த்திருந்தாலும், அதற்கு வேறு ஒரு வடிவத்தை கொடுத்திருக்கும் ஜோஜு ஜார்ஜ், அதை விறுவிறுப்பாகவும், உணர்வுப்பூர்வமாகவும் சொல்லி இயக்குநராக வெற்றி பெற்றிருக்கிறார்.
மொத்தத்தில், ‘பணி’ குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்