’சூது கவ்வும் 2’ திரைப்பட விமர்சனம்…

படத்துவக்கத்திலேயே கருணாகரன் தமிழக நிதி அமைச்சராக ஊழல் பட்டியலில் முதலில் இருக்கிறார், கட்சிக்கு நிறைய நிதிகளை கொடுப்பதால் கட்சியின் தலைவர் முதலமைச்சர் அவரை கண்டுக்காமல் இருக்கிறார். முதல்வர் மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பொறுப்பை கருணாநிதியிடம் ஒப்படைக்கிறார் அதன்படி தொழில்நுட்பம் மூலம் மக்களுக்கு பணத்தை விநியோகம் செய்ய முயல்கிறார் அதற்கு ரூ 60 ஆயிரம் கோடியை வெளிநாட்டு வங்கியில் டெபாசிட் செய்து அந்த பணத்தை விநியோகம் செய்வதற்காக ஒரு கருவியை வங்கியிலிருந்து பெற்றுக்கொள்கிறார்…
முதல் பாகத்தில் வரும் தாஸ் கதாபாத்திரம் போல், கற்பனை பெண்ணுடன், கடத்தல் தொழில் செய்து வரும் மிர்ச்சி சிவா, அமைச்சராக இருக்கும் கருணாகரனை கடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார். வங்கியில் இருக்கும் பணத்தை முதல்வரிடம் கொடுக்க செல்லும் போது மிர்ச்சி சிவா கருணாகரனை கடத்தி விடுகிறார். அதனால் அரசியலில் மட்டும் இன்றி கருணாகரனின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுகிறது.
சூது கவ்வும் கதையின் மையப்புள்ளியான அருமை பிரகாசம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருணாகரன், முதல் பாகத்தைப் போலவே இந்த இரண்டாம் பாகத்திலும் சிறப்பாக நடித்து முழு படத்தையும் தன் தோள் மீது சுமந்திருக்கிறார். மிர்ச்சி சிவாவை நாயகனாக முன்னிறுத்தினாலும், படத்தில் அவரை ஓரம் கட்டிவிட்டு ரசிகர்ளின் கவனத்தை ஈர்ப்பதில் கருணாகரனுக்கு தான் முதலிடம்.
அருள்தாஸ், கல்கி, கவி, யோக் ஜேபி, கராத்தே கார்த்தி, கற்பனை பெண்ணாக நடித்திருக்கும் ஹரிஷா ஜஸ்டின் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் எட்வின் லூயிஸ் , ஒளிப்பதிவாளர் கார்த்திக் கே.தில்லை,
கதாபாத்திரங்களை காட்டிய விதம் என முழு படத்தையும் முதல் பாகத்தை மனதில் வைத்தே காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் இக்னேசியஸ் அஸ்வின் அதிகம் உழைத்திருப்பது திரையில் தெரிகிறது.
மிகப்பெரிய வெற்றி பெற்ற ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை, அதன் முந்தைய தொடர்ச்சியாக இயக்குநர் எஸ்.ஜே.அர்ஜுன் எழுதியிருக்கும் கதையில், அரசியல் சம்பவங்கள் சுவாரஸ்யம் மிக்கதாக இருக்கிறது…
மொத்தத்தில், ‘சூது கவ்வும் 2’ நீங்களே பார்த்து சொல்லுங்கள்.