‘வருணன்’ திரைப்பட விமர்சனம் 3.5/5

124

நாயகனாக நடித்திருக்கும் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் அவருடைய கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்.மற்றும் நாயகியாக நடித்திருக்கும் கேப்ரில்லா கதாபாத்திரத்திற்கு ஏற்ப கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். மற்றொரு நாயகன், நாயகியாக நடித்திருக்கும் பிரியதர்ஷன் மற்றும் ஹரிபிரியா ஜோடிக்கும் வழக்கமான வேலை தான் என்றாலும் அதை குறையில்லாமல் எல்லோரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள் ..

ராதாரவி மற்றும் சரண்ராஜ் இரு பில்லர்களாக படத்தினை தாங்கி நின்றிருக்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ், லைவ் லொக்கேஷன்களில் கேமராவை சுழல வைத்து காட்சிகளை வேகமாக பயணிக்க் வைத்திருக்கிறார். கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியை படமாக்கி விதம் வியக்க வைக்கிறது.

தண்ணீர் கேன் பிசினஸில் தொடங்கி கதை வழக்கமான அடிதடி, சண்டை, சதி என கதை வேறு ஒரு பாதையை நோக்கி பயணப்பட்டு விட்டது.

இசையமைப்பாளர் போபோ சசியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்தாலும், சில இடங்களில் கொஞ்சம் ஓவராக பில்டப் கொடுத்திருக்கிறது.

க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி வித்தியாசமான முயற்சி. அருமையாக பண்ணி இருந்தாங்க

மகேஸ்வரியின் காட்சியை சிங்கிள் ஷார்ட் ஆக கொண்டு சென்றதில் இயக்குனரின் ரொம்ப அருமையாக பண்ணுகின்றார் இயக்குனர்..

இப்படம் ஒரு முறை பார்க்கலாம்….