’ரெட்ரோ’ திரைப்பட விமர்சனம் 4/5

67

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், சுஜித் ஷங்கர், நாசர் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “ரெட்ரோ”. கங்குவா படத்தின் பிறகு சூர்யா நடிக்கும் படம் என்பதால் படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு…

பூஜா ஹெக்டே அந்தமானில் இருக்கும் தகவல் சூர்யாவுக்கு தெரிய வருகிறது. அவரை சமாதானப்படுத்தி அவர் விரும்பியது போல், அடிதடி இல்லாத அமைதியான புதிய வாழ்க்கையை தொடங்குவதற்காக அந்தமான் செல்லும் சூர்யாவுக்கு, அங்கே மிகப்பெரிய பொறுப்பும், யுத்தமும் காத்துக் கொண்டிருக்கிறது. அதனால் சூர்யாவின் வாழ்க்கை என்னவானது?, என்பதை மாஸாகவும், கிளாஸாகவும் சொல்வதே ‘ரெட்ரோ’.

வளர்ப்பு அப்பா என்றாலும், அவருக்காக எதையும் செய்யும் துணிச்சல் மிக்க மகனாகவும், காதல் தோல்வியால் அரக்கனாகி, பிறகு ஒரு இனத்தின் விடுதலைக்காக போரிடும் போராளி, என ஒரே கதாபாத்திரத்திற்கு தனது நடிப்பு மூலம் பல முகங்கள் கொடுத்திருக்கிறார் சூர்யா. முழு படத்தையும் தனது தோளில் சுமந்திருக்கும் சூர்யா, சிரிக்காமலேயே நடனம் ஆடுவது, ஆக்‌ஷன் காட்சிகளை ஸ்டைலிஷாக கையாள்வது என்று பார்வையாளர்களை காட்சிக்கு காட்சி ரசிக்க வைக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் பூஜா ஹெக்டே, கதையின் மையப்புள்ளியாகவும், கதையை நகர்த்திச் செல்லும் கருப்பொருளாக இருந்தாலும், திரைக்கதையில் தனித்துவம் இல்லாமல் வழக்கமான நாயகியைப் போல் பயணித்திருக்கிறார். இருந்தாலும், அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் ஜோஜு ஜார்ஜ் தனது இயல்பான நடிப்பு மூலம் மிரட்டியிருக்கிறார். கிங் மைக்கலாக நடித்திருக்கும் நடிகர், நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் ஏற்கனவே மிகப்பெரிய ஹிட்டாகியிருந்தாலும், காட்சிகளுடன் பார்க்கும் போது கூடுதல் ஸ்பெஷலாக இருக்கிறது. பின்னணி இசை மற்றும் பீஜியம்கள் பார்வையாளர்களையும் ரெட்ரோ காலக்கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது.

ஒளிப்பதிவாளர் ஸ்ரேயஸ் கிருஷ்ணாவின் கேமரா, சூர்ய, பூஜா ஹெக்டே உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளையும் ரெட்ரோ காலத்து மனிதர்களாக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, ஆக்‌ஷன் காட்சிகளை மிக ஸ்டைலிஷாக காட்சிப்படுத்தி அசத்தியிருக்கிறது.

இரண்டு கதைகள், அதனுடன் வரும் மற்றொரு குட்டி கதையோடு படம் பயணித்தாலும், பார்வையாளர்கள் எந்தவித குழப்பமும் இன்றி படத்தை புரிந்துக் கொள்ளும்படி காட்சிகளை நேர்த்தியாக கோர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஷாஃபிக் முகமது அலி.

ரெட்ரோ காலக்கட்ட உலகை நம் கண் முன் நிறுத்தியிருக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், அக்காலத்து மாஸ் ஆக்‌ஷன் படத்தை தற்போதைய காலக்கட்ட மேக்கிங் மூலம் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.

அம்மா செண்டிமெண்ட், கல்ட் சண்டைக்காட்சிகள், வித்தியாசமான ஆக்‌ஷன் காட்சிகள்  ஆகியவை ஒரு பக்கம் பார்வையாளர்களை எண்டர்டெயின் செய்கிறது. மறுபக்கம் இவை அனைத்தையும் மிக சிறப்பாக கையாண்டிருக்கும் சூர்யா, படம் முழுவதும் ரெட்ரோ ஸ்டைலில் பார்வையாளர்களை ரசிக்க வைக்கிறார்.