‘ரஜினி கேங்க்’ திரைப்பட விமர்சனம்
நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ரஜினி கிஷன், காமெடி ஜானர் படத்திற்கு பொருந்தும் முகம். ஆட்டம், காதல், காமெடி என படம் முழுவதும் அசால்டாக நடித்திருப்பவர் முதல் படம் என்ற பயமே இல்லாமல் நடித்திருக்கிறார்..
முனீஷ்காந்த் காமெடி என்ற பெயரில் ஒரே மாதிரியான ரியாக்ஷனை கொடுத்து பார்வையாளர்களை சலிப்படைய செய்கிறார். கூல் சுரேஷ் தேவையில்லாமல் கத்திக்கொண்டு இருப்பது காதை கிழிக்கிறது. மொட்ட ராஜேந்திரன், கல்கி ஆகியோர் வரும் காட்சிகளிலும் காமெடி நெடி குறைவே.
நாயகியாக நடித்திருக்கும் த்விவிகா, காமெடி மற்றும் காதல் பாடல்கள் என இரண்டு தளங்களிலும் கவர்கிறார். நடிப்பும் அளவு
ஒளிப்பதிவாளர் என்.எஸ்.சதீஷ் குமார், படத்தையும், பாடல் காட்சிகளையும் கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபெர்ட்டின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கமர்ஷியலாக இருக்கிறது.
சாதாரணமான கதையை, மிக சாதாரணமாகவே படத்தொகுப்பு செய்திருக்கும் படத்தொகுப்பாளர் ஆர்.கே.வினோத் கண்ணா, காட்சிகளின் நீளத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
எழுதி இயக்கியிருக்கும் எம்.எஸ்.ரமேஷ் பாராதி, முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். பார்வையாளர்கள் எந்தவித லாஜிக்கையும் பார்க்காமல் சிரிக்க வேண்டும் என்பதில் அதிகம் மெனக்கெட்டிருக்கும் இயக்குநர் அதற்காக காமெடி நடிகர்களை மட்டுமே பெரிதும் நம்பியிருக்கிறார்.
இயக்குநர் எம்.எஸ்.ரமேஷ் பாரதி, காமெடி நடிகர்கள் மீது செலுத்திய கவனத்தை தனது நகைச்சுவை எழுத்தில் செலுத்தியிருந்தால், பார்வையாளர்களை கொஞ்சமாக சிரிக்க வைத்திருக்கும் இந்த கேங்க் வயிறு வலிக்க சிரிக்க வைத்திருக்கும்.