“நந்தி வர்மன்” திரைப்பட விமர்சனம்!

சென்னை:

அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், சுரேஷ் ரவி, ஆஷா வெங்கடேஷ், போஸ் வெங்கட்,  நிழல்கள் ரவி, கஜராஜ், மீசை ராஜேந்தர், ஆடுகளம் முருகதாஸ், கோதண்டம், ஜே.எஸ்.கோபி ம்ற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் “நந்திவர்மன்”

சமீபத்தில் வெளி வந்து ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல்லவப் பேரரசின் மாபெரும் வீரரான அந்த நாட்டின் அரசன் நந்திவர்மன் அரசாண்டபோது ஒவ்வொரு நாட்டிலும் கொள்ளை அடிக்கும் கும்பல் தலைவன் கோரா மற்றும் அவனது கூட்டாளிகள் ஒன்று சேர்ந்து பல்லவன் நாட்டில் உள்ள அனுமந்தீஸ்வரர் கோயிலில் பெரிய அளவில் புதையல் இருப்பதை தெரிந்துக் கொண்டு எப்படியாவது கொள்ளை அடிக்க வேண்டும் என்று அந்த கோயிலுக்குள் நுழைகிறார்கள்.  அந்த சமயத்தில் நந்திவர்மன் அவருடன் போரிடும்போது கொலை செய்யப்படுகிறார்.. நந்திவர்மன் கொல்லப்படுவதற்கு முன்பு அவனது கையில் ஒரு மாய வாள் இருக்கிறது. அந்த வாளின்  கைப்பிடி மட்டும் அனைவருக்கும் தெரியும்.

ஆனால் எதிரியை கொல்லும் போது ஒருவித ஒளியுடன் அதன் கூர்மை வெளிப்படும்.  அந்த அதிசயமான வாள் அனுமந்தீஸ்வரர் கோயிலில் புதைந்து விடுகிறது. தங்கப் புதையலுடன் இந்த வாளும் சேர்ந்து புதைந்து இருப்பதால், அதனை கண்டுபிடிப்பதற்காக  தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர்கள்,  நமது அரசாங்கத்தின் மூலமாக ஒரு குழு அமைத்து, செஞ்சிக்கு அருகில் உள்ள அனுமந்தபுரத்தில் உள்ள கோயில் புதைந்த இடத்தில் ஆராய்ச்சி மேற்கொள்கின்றனர்.

செஞ்சி பகுதியில் உள்ள அந்த அனுமந்தீஸ்வரர் கோயிலில் புதையலிருப்பதை யாரும் எடுக்கக் கூடாது என்று மக்கள் பயத்துடன்,  இந்த அகழ்வாராய்ச்சியால் அனுமந்தபுரம் கிராமத்தில்  பேரழிவு ஏற்படும் என்று கூறி, போஸ் மற்றும் அவரது குழுவினரையும் தடுக்கின்றனர். . இந்நிலையில் அந்த ஊரில் பூமிக்கு அடியில் இருக்கும் கோவில் பக்கம் யார் சென்றாலும் ஆறு மணிக்கு மேல் பலர் அமானுஷ்ய சக்தியால் இறக்கின்றனர். . அதனால் அந்த ஊர் மக்கள் மாலை 6 மணிக்கு மேல் அந்த ஊரை விட்டு வெளியே வர மாட்டார்கள்.

ஆனால் அகழ்வாராய்ச்சி செய்ய முயலும் போஸ் தலைமையில் வந்த குழுக்கள் எந்த காரணத்தைக் கொண்டும் அந்த புதையலை எடுக்காமல் விடக் கூடாது என்று அனுமந்தீஸ்வரர் கோயில் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து  தோண்டுகின்றனர்.. இந்த சூழலில் அந்த கிராமத்தில் உள்ள சிலர் ஒருவர் பின் ஒருவராக அமானுஷ்யமான முறையில் இறக்கிறார்கள். அதேபோல தொல்லியல் தொழில் சார்ந்த சிலரும் இறக்க நேரிடுகிறது. இந்த மர்மமான மரணம் ஏன் நடக்கிறது?. இந்த சூழ்நிலையில் இந்த கொலைகள் பற்றிய விசாரணையை கையில் எடுக்கும் காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் ரவி பலர் மரணம் அடையும் மர்மம் என்ன என்பதை கண்டுபிடிக்க முயலுகிறார்?  இந்த மர்மத்திற்கு பின்னால் அனுமந்திஸ்வரர் கோயிலில் உள்ள புதையல் தான் காரணமா என்பதை காவல்துறை அதிகாரி சுரேஷ் ரவி கண்டுபிடித்தாரா? இல்லையா?  என்பது தான் “நந்திவர்மன்” படத்தின் மீதி கதை.

காவல்துறை சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கதாநாயகன் சுரேஷ் ரவி, அந்த கதாபாத்திரத்திற்கு ஏர்றவாறு  முக கச்சிதமாக பொருந்தி உணர்ச்சிபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.  அதே நேரத்தில் சண்டை காட்சிகளில் அசத்தியுள்ள, இவர் காதல் காட்சிகளிலும் நியாயம் சேர்க்கும் வகையில் நடித்து, தன்னை முழுமையான கதாநாயகன் என்பதை நிரூபித்திருக்கிறார்..

இரண்டாவது கதாநாயகன் போல் வலம் வரும் போஸ் வெங்கட் தனது சீரியசான, அனுபவமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்கிறார்., அவர் தனது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து  திரைக்கதைக்கு ஏற்றவாறு நடித்து இருப்பது படத்திற்க்கு பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஆஷா வெங்கடேஷ், ஒரு சில முகபாவங்கள் மூலமாகவே தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி விடுகிறார். சிலை கடத்தல் பேர் வழியாக கஜராஜ் அவருக்கு துணை நிற்கும் கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவி வில்லத்தனங்களை செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள்.

மீசை ராஜேந்தர், ஆடுகளம் முருகதாஸ், அம்பானி சங்கர், கோதண்டம், ஜே.எஸ்.கே.கோபி என படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்கள் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தாலும் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

ஜெரால்டு பெலிக்ஸ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும், ஓளிப்பதிவாளர் சேயோன் முத்து மற்றும் கலை இயக்குனர் முனிகிருஷ்ணன், அவர்கள் பங்களிப்பு திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளது.

மன்னர்கள் காலத்தில் உள்ள தமிழக வரலாற்றை சொல்லும் பல ஆதாரங்கள் இன்றளவும் தமிழ்நாட்டில் புதைந்திருக்கிறது, என்ற உண்மையை சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் பெருமாள் வரதன், பல்லவப் பேரரசின் மாபெரும் வீரரான நந்திவர்மன் என்ற மன்னனைப்பற்றிய சுவாரஸ்யமான வரலாற்று கதையுடன், தற்போதைய காலக்கட்டத்துக்கு ஏற்ற வகையில் சஸ்பென்ஸ் த்ரில்லர் கலந்த முறையில் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்போடு, பரபரப்பு நிறைந்த திருப்பங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளார் இப்படத்தின் மூலம் பெரிய இயக்குனராக வலம் வர இருக்கும் பெருமாள் வரதனுக்கு வாழ்த்துகள்.

மொத்தத்தில், ‘நந்திவர்மன்’ நிச்சயம் ரசிகர்களின் மனதை கவரும் என்பதில் ஐயமில்லை.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.

 

"Nandhi Varman" Movie ReviewFeatured
Comments (0)
Add Comment