சித்தார்த் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக கொண்டாடப்பட்டிருந்த பொழுது
அந்த அணியில் இருந்து நீக்கிவிட்டு புதியவருக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்தது கிரிக்கெட் வாரியம்.சித்தார்த் தனது ஓய்வு அறிவிப்பை அறிவிக்க வேண்டும் என்று அவரை வற்புறுத்துகிறது. ஆனால், தோல்வியுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்க விரும்பாத சித்தார்த், இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற இருக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி தனது திறமையை நிரூபித்த பிறகே ஓய்வு குறித்து அறிவிக்க நினைக்கிறார். இதனால், அந்த டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்…

பிரபல தயாரிப்பாளரான எஸ் சஷிகாந்த் அவர்களின் இயக்கத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின், ஆடுகளம் முருதாஸ், தீபா உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகி இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் தான் டெஸ்ட்.
முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் மாதவன், சித்தார்த் மற்றும் நயன்தாரா மூன்று பேரும் அசுரத்தனமாக நடித்திருக்கிறார்கள். மூவரில் யார் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்? என்ற கேள்விக்கு சட்டென்று பதில் சொல்ல முடியாத அளவுக்கு ஒவ்வொருவரும் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி சிறு சிறு ரியாக்ஷன்களை கூட அசத்தலாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
வெற்றி பெற்றவன் பின்னாடி செல்லும் உலகத்தைப் பார்த்து ஆத்திரம் கொள்ளும் தோல்வியுற்றவனாக நடித்திருக்கும் மாதவன், தனது கண்டுபிடிப்பிற்கான அங்கீகாரத்திற்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டாலும், இறுதியில் பணத்திற்காக எடுக்கும் வில்லன் அவதாரத்தை மிரட்டலாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
வெற்றி என்பது சாதாரணமாக கிடைப்பதில்லை, அந்த வெற்றியை கடைசிவரை தன்வசப்படுத்திக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சித்தார்த், அளவான நடிப்பு மூலம் தனது அழுத்தமான மனநிலையை ரசிகர்களிடத்தில் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.
ரு சில இடங்களில் ஓகே ரகமாக இருந்தாலும், பல இடங்களில் ஓவர் ஆக்டிங்கை கொடுத்து காட்சிகளை சிதைத்துவிட்டார் நயன்தாரா.
இந்த கதாபாத்திரத்திற்கு இவர் தான் பொருத்தமானவர் என்று கூறும் அளவிற்கு தனது நடிப்பில் அசாத்திய திறமையை வெளிப்படுத்தியிருந்தார் சித்தார்த். அர்ஜூன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.
ஆடுகளம் முருகதாஸ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்திருக்கிறார்.
பல படங்களில் பார்த்த ஒரு கதை தான் என்றாலும், கதையில் என்னென்ன தன்னால் கொடுக்க முடியுமோ அதை அளவாகவும் அழகாகவும் கொடுத்து கைதட்டல் பெற்றிருக்கிறார் இயக்குனர்.
அடுத்து என்ன நடக்கும் என்ற தோற்றத்தை கொண்டு வந்ததில் வென்றிருக்கிறார் இயக்குனர்.
இருந்தாலும், திரைக்கதையின் வேகம் நம்மை சோதனைக்குள் கொண்டு சென்று விட்டது. மிகவும் மெதுவாக கதை நகர்வதால் எப்போதுதான் க்ளைமாக்ஸ் வரும் என்று கூறும் அளவிற்கு கொண்டு சென்று விட்டார் இயக்குனர்.
விராஜ் சிங் கோஹில் அவர்களின் படத்திற்கு தேவையான வெளிச்சத்தைக் கொடுத்து ஒளிப்பதிவை நச்சென கொடுத்திருக்கிறார்.
சக்தி ஸ்ரீ கோபாலனின் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை என்றாலும், பின்னணி இசையை ஏற்றுக் கொள்ளலாம்.
மொத்தத்தில்,
டெஸ்ட் – ஒருமுறை பார்க்கலாம்…