நீண்ட வருடங்களுக்குப் பிறகு அஜித்தின் ரசிகர்களுக்காகவே உருவாக்கப்பட்டு இருக்கிறது இந்த படம். இப்படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் படத்தை கொண்டாடுகிறார்கள்..

மார்க் ஆண்டனி படத்தினை இயக்கிய இயக்குனர் “Good Bad Ugly”. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்தை வைத்து இயக்கி வெளியாகிறது. த்ரிஷா, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், யோகிபாபு, பிரபு, ஜாக்கி ஷெராப், ப்ரியா பிரகாஷ் வாரியர், சுனில் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகி திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் தான் “Good Bad Ugly”
படத்திற்கு இசையில் மிரட்டி இருக்கிறார் இசையோடு அஜித் குமார் ஆக்ஷனை பார்க்கும்போது ரசிகர்களுக்கு மிகவும் கொண்டாட்டமாக இருக்கிறது இதற்கு முழு காரண ஜி வி பிரகாஷ்குமார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
மும்பையில் பிரபல கேங்ஸ்டர் ஆக இருக்கிறார் நடிகர் அஜித். திரிஷாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் அஜித். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க, பிறந்த குழந்தையை காண செல்கிறார் அஜித்.
ஆனால் அந்த குழந்தையை தொடக்கூடாது என்று சொல்லி விடுகிறார் திரிஷா. அடிதடி, ரவுடிசம் அனைத்தையும் விட்டுவிட்டு வரும்படி கூறுகிறார் திரிஷா.
இதனைத் தொடர்ந்து தன் மகனுக்காகவும் தனது மனைவிக்காகவும் அனைத்தையும் துறந்து ஜெயிலுக்கு செல்கிறார் அஜித். தனது குடும்பத்திற்காக 17 வருடங்கள் சிறையில் இருக்கிறார் அஜித்குமார்.
தனது மகனை ஸ்பெயினில் வளர்த்து வருகிறார் திரிஷா. 17 வருடங்கள் கழித்து தனது மகனை காண செல்கிறார் அஜி.த் அப்போது அஜித்தின் மகன் போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறை செல்கிறார். இதனைப் பார்த்ததும் பேர அதிர்ச்சி ஆகிறார் அஜித்.
அஜித் மாஃபியா வாழ்க்கை, திருமணம், குழந்தை பிறப்பு என மூன்று பாகங்கள் எடுக்கும் அளவுக்கு படத்தில் ஏகப்பட்ட விசயம் இருந்தாலும், 2 மணி நேரம் 20 நிமிடங்களில் அதை சுருக்கி சொல்லியிருக்கும் படத்தொகுப்பாளர் விஜய் வேலுகுட்டியின் பணி படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
சண்டைப்பயிற்சி இயக்குநர் சுப்ரீம் சுந்தர், ஆடை வடிவமைப்பாளர்கள் அனு வர்தன், ராஜேஷ் குமாராசு, கலை இயக்குநர் ஜி.எம்.சேகர் ஆகியோரது பணியும் திரையில் பளிச்சிடுகிறது.
எழுதி இயக்கியிருக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் என்ற மாஸ் ஹீரோவை வைத்து மாபெரும் மாஸ் திருவிழா நடத்தியிருக்கிறார். இயக்குநராக அல்லாமல் அஜித்தின் ரசிகராக அவர் நிற்பது, நடப்பது, சிரிப்பது, முறைப்பது, காதலிப்பது, கவலைப்படுவது, கார் ஓட்டுவது என அனைத்தையும் ரசித்து ரசித்து காட்சிகளை வடிவமைத்திருப்பது படம் முழுவதும் தெரிகிறது.
படத்தில் லாஜிக் இல்லை என்றாலும், அஜித் என்ற மாஸ் ஹீரோவை வைத்துக்கொண்டு மிகப்பெரிய மேஜிக் செய்திருக்கும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆக்ஷன் மற்றும் மாஸ் விருந்து வைத்து அவர்களை திருப்திப்படுத்தியிருக்கிறார்.
மொத்தத்தில் “Good Bad Ugly”
எழுத்தால் சொல்ல வேண்டிய படம் அல்ல திரையில் பார்த்து ரசிகர்கள் கொண்டாட வேண்டிய படம்…